பவுலின் அழைப்பு- அருட்பணி. அருளம்பலம் ஸ்டீபன்

வாசகர்களின் கேள்விகளுக்கு மறுமொழி கூறுகிறார் அருட்பணியாளர் அருளம்பலம் ஸ்டீபன்

கேள்வி: பவுலின் அழைப்பைப் பற்றி திருத்தூதுவர்பணிகளில் லூக்கா கூறுவதற்கும் பவுலின் அழைப்பைப் பற்றி கலாத்தியர் நிருபத்தில் பவுல் கூறுவதற்கும் இடையே ஏன் வேறுபாடுகள் காணப்படுகின்றன?

அழைப்பைப் பற்றி திருத்தூதர்பணிகளில் லூக்கா எழுதியுள்ளார். சிறப்பாக, லூக்கா 9, 22, 28ம் அதிகாரம் ஆகியவற்றில் எனது அழைப்பையும் அதன் பின்னணியையும் அவர் வடிக்கின்றார். எனினும், எனது அழைப்பில் தமஸ்கு வீதியில் நடைப்பெற்ற நிகழ்வை ஓர் தீவிரவாதப்போக்குடன் நான் நடந்ததாக லூக்கா தனது பணி நூலில் எழுதி இருக்கிறார். ஆனால், அது அவ்வாறாக இல்லை. கலாத்தியர் 1ம், 2ம் அதிகாரங்களில் நான் எனது அழைப்பைப் பற்றி பேசும்போது என் அழைப்பு, தாயின் கருவில் இருக்கும்போதே கடவுள் என்னைத் தெரிந்தெடுத்தார் என நம்புகின்றேன். 

எனவே, என் அழைப்பு எரேமியாவின் அழைப்புக்கு ஒத்தது என நான் ஏற்றுக்கொள்கின்றேன். மேலும், லூக்கா கூறும் தீவிரப்போக்கான சிந்தனைகள் என்னிடத்தில் காணப்படவில்லை. அத்துடன், தமஸ்கு வீதி நிகழ்வின் பின்னர் நான் மூன்று வருடம் தியானத்தில் ஈடுப்பட்ட பின்னரே எனது திருப்பணியை தொடங்கியுள்ளேன். ஆண்டவர் தனது பணிக்கு முன்னாக தன்னை ஆயத்தப்படுத்தியதுபோல, எனது பணியிலும் ஆயத்தநிலை காணப்பட்டது. எனவே, லூக்கா கூறும் எனது அழைப்பிலிருந்து நான் வெளிப்படுத்தும் எனது அழைப்பு திட்டவட்டமானதாகவும் உண்மைத் தன்மையுள்ளதாகவும் காணப்படுகின்றது. இதனை பெருமளவிற்கு நீங்கள் ஏற்றுக்கொள்ளலாம். 


Comments